1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 9 நவம்பர் 2022 (09:34 IST)

பொல்லார்டை கழட்டிவிட மும்பை இந்தியன்ஸ் அணி முடிவா?

பொல்லார்டை கழட்டிவிட மும்பை இந்தியன்ஸ் அணி முடிவா?
மும்பை இந்தியன்ஸ் அணியின் அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் கைரன் பொல்லார்டு.

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரர் கைரன் பொல்லார்டு. அந்த அணி 5 முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர். பலமுறை இக்கட்டான நிலைமையில் இறங்கி அணியை வெற்றிப் பெற செய்துள்ளார்.

கடந்த ஆண்டு மெஹா ஏலத்தில் இவரை தக்க வைத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால் இவர் முன்பு போல சிறப்பாக விளையாடவில்லை. அதனால் அணியும் அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை.

இந்நிலையில் இப்போது நடக்க உள்ள ஏலத்தில் பொல்லார்ட் உள்ளிட்ட 12 பேரை கழட்டிவிட மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.