செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 14 ஜூன் 2022 (10:43 IST)

ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தைக் கைப்பற்றிய இரு நிறுவனங்கள்… வெளியான தகவல்!

ஐபிஎல் தொடரின் அடுத்த இரு ஆண்டுகளுக்கான ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் மற்றும் வயாகாம் 18 ஆகிய நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் டி20 சீசன் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. இந்த ஆண்டு முதல் இந்த போட்டிகளில் 10 அணிகள் போட்டியிட்டு விளையாடி வருகின்றன. இந்த போட்டிகளை ஒளிபரப்புவதற்கான தொலைகாட்சி உரிமம் மற்றும் ஓடிடி உரிமங்கள் பேக்கேஜாக ஏலத்தில் விடப்படுகின்றன.

இந்நிலையில் அடுத்த 2023 முதல் 2027ம் ஆண்டு வரையிலான ஒளிபரப்பு உரிமையை பிசிசிஐ 4 பிரிவுகளாக பிரித்து ஏலத்தை தொடங்கியுள்ளது. அதன்படி ஆசிய துணைகண்டத்தில் மட்டும் ஒளிபரப்புவதற்கான உரிமை, டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை, 18 போட்டிகளுக்கு டிஜிட்டல் அல்லாத ஒளிபரப்பு உரிமை மற்றும் உலக நாடுகளுக்கான ஒளிபரப்பு உரிமை என நான்கு பிரிவுகளில் நேற்று ஏலம் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பேக்கேஜ் ஏ மற்றும் பேக்கேஜ் பி ஆகிய பிரிவுகளில் உள்ள தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமை மட்டும் 43000 கோடி ரூபாய்க்கு மேல் சென்றுள்ளது. தொலைக்காட்சி உரிமையை ஸ்டார் நிறுவனம் தக்கவைத்துள்ள நிலையில், டிஜிட்டல் உரிமையை வயாகாம் 18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது.