தொடர்புடைய செய்திகள்
- டக் அவுட் ஆனபோதும் நேற்றைய போட்டியில் தோனி படைத்த முக்கிய சாதனை!
- ஷிவம் துபேவிடம் பிரச்சனை எதுவும் இல்லை… சி எஸ் கே பயிற்சியாளர் நம்பிக்கை!
- வரட்டா மாமே.. டுர்ர்..! ஐபிஎல்லில் இருந்து விலகும் இங்கிலாந்து வீரர்கள்! – பேச்சுவார்த்தை நடத்தும் பிசிசிஐ!
- இதுக்கு தோனியை அணியில் எடுக்காமலேயே இருக்கலாம்… என்ன இப்படி பொங்கிட்டாரு பஜ்ஜி?
- தோனியின் டக் அவுட்டை ஏன் கொண்டாடவில்லை?… ஹர்ஷல் படேல் சொன்ன அடடே காரணம்!
மும்பை பவுலர்களிடம் பணிந்த ஐதராபாத் பேட்ஸ்மேன்கள்… இலக்கு இதுதான்!
ஐபிஎல் தொடரின் 55 ஆவது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இந்த தொடரின் ஆரம்ப சில போட்டிகளில் காட்டடியாக விளையாடி அதிரடியாக ரன்களைக் குவித்த ஐதராபாத், கடந்த சில போட்டிகளாக தோல்விகளை சந்தித்து வருகிறது. அதனால் அவர்கள் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு மங்கி வருகிறது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் மும்பை பவுலர்கள் ஐதராபாத் பேட்ஸ்மேன்களை அதிரடியாக விளையாட முடியாமல் கட்டுப்படுத்தினர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் மட்டும் அதிரடியாக விளையாடி 48 ரன்கள் சேர்த்தார். அதே போல பேட் கம்மின்ஸ் கடைசி நேர அதிரடியாக 17 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 173 ரன்கள் சேர்த்தது. மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ப்யூஷ் சாவ்லா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
அடுத்த கட்டுரையில்