1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Shivam dube is in perfect form says csk coach

ஷிவம் துபேவிடம் பிரச்சனை எதுவும் இல்லை… சி எஸ் கே பயிற்சியாளர் நம்பிக்கை!

CSK vs PBKS
நேற்று நடந்த முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் மோதிய நிலையில் சென்னை அணி சூப்பர் வெற்றியை பெற்றது. இந்தபோட்டியில் சென்னை அணி முதலில் பேட் செய்து 169 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்கள் மட்டுமே பெற்று 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் சி எஸ் கே அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பியது. இந்த தொடரின் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய ஷிவம் துபே அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். விக்கெட்கள் தொடர்ந்து விழுந்தாலும் தோனி முன்கூட்டியே இறங்காமல் ஒன்பதாவது பேட்ஸ்மேனாக வந்தார்.

இந்நிலையில் சி எஸ் கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் பேசும் போது “எங்கள் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் எந்த பிரச்சனையும் இல்லை. ஷிவம் துபே அடுத்தடுத்து டக் அவுட் ஆனாலும் அவர் நல்ல ஃபார்மில்தான் இருக்கிறார். சில ஷாட்கள் ஆடும் போது எதிர்பாராத விதமாக விக்கெட்டை இழக்க நேரிடும்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth