சேஸிங்க்கு சூர்யகுமார் இருக்கார்.. இறங்கி அடிச்சுக்கலாம்! – பவுலிங் எடுத்த மும்பை இந்தியன்ஸ்!
இன்றைய ஐபிஎல் போட்டியில் ப்ளே ஆப் செல்வதற்காக லக்னோ – மும்பை அணிகள் மோதிக் கொள்ளும் நிலையில் மும்பை அணி டாஸ் வென்று பவுலிங் தேர்ந்தெடுத்துள்ளது.
ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் முடிவுக்கு வரும் நிலையில் ப்ளே ஆப் தகுதி பெறுவதற்காக பல அணிகள் போராடி வருகின்றன. கிட்டத்தட்ட 8 அணிகளுமே ப்ளே ஆப் வாய்ப்புள்ள நிலையில் இருப்பதால் கடைசி போட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும், 4ம் இடத்தில் உள்ள லக்னோ அணியும் மோதுகின்றன. இரண்டு அணிகளுக்குமே இன்று கிடைக்கும் 2 புள்ளிகள் மிகவும் அவசியமானது.
இந்நிலையில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. மும்பை அணியின் பேட்டிங் ஆர்டர் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், வதேரா, டிம் டேவிட், க்ரீன் போன்றவர்களால் பலமாக உள்ளது. அதனால் சேஸிங் எளிதாக செய்ய முடியும் என்பதால் பவுலிங்கை தேர்வு செய்துள்ளனர்.
லக்னோவிலும் டி காக், ஸ்டாய்னிஸ், பூரன், க்ருனால் பாண்ட்யா நல்ல ஃபார்மில் உள்ளனர். இதுவரை 200+ ரன்களில் இந்த சீசனில் மும்பை மூன்று முறை சேஸ் செய்துள்ள நிலையில் இன்றும் ஒரு 200+ சேஸிங் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K