1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 மே 2023 (11:40 IST)

அர்ஜூன் டெண்டுல்கரை கடித்த நாய்! – லக்னோ மைதானத்தில் அதிர்ச்சி!

Arjun tendulkar
இன்றைய ஐபிஎல் தொடரில் லக்னோ – மும்பை அணிகள் மோத உள்ள நிலையில் பயிற்சியில் இருந்த அர்ஜூன் டெண்டுல்கரை நாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இன்று லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடைபெறுகிறது. லக்னோவின் எகானா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ள நிலையில் லக்னோ, மும்பை அணி வீரர்கள் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று லக்னோ அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில் லக்னோ அணி வீரர்களுடன் பேசும் அர்ஜூன் டெண்டுல்கர் தன்னை ஒரு தெரு நாய் இடது கையில் கடித்து விட்டதாக கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசனில் அறிமுகமாகியுள்ள அர்ஜூன் டெண்டுல்கர் 4 போட்டிகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக விளையாடி வருகிறார். நாய் கடித்திருந்தாலும் இன்றைய போட்டியில் அவர் விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K