நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடந்த இந்த ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியை விக்கெட்டுகளை சுருட்டி 155 ரன்களில் நிறுத்தியது சிஎஸ்கே. எளிமையான டார்கெட் என்பதால் நிதானமாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் விக்னேஷ் புதூரிடம் 3 விக்கெட்டுகளை இழந்தது அதிர்ச்சி அளித்தது. என்றாலும் சிறப்பாக விளையாடி முதல் போட்டியை வென்றது.
ஆட்டம் முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் பரஸ்பரம் கைகுலுக்கி மரியாதை செய்து கொள்வது வழக்கம். அப்படி மும்பை அணி வீரர்கள் தோனியிடம் வரிசையாக கைகொடுத்து சென்றபோது, அதில் ஒருவரை தோனி விளையாட்டாக பேட்டால் அடித்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
அந்த மும்பை வீரர் வேறு யாருமல்ல, கடந்த சீசன் வரை சென்னை அணிக்காக விளையாடிய தீபக் சஹார்தான். தீபக் சஹார் இந்த சீசனில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். அவர் சிஎஸ்கேவில் இருந்தபோது தோனி எப்போதுமே அவரை விளையாட்டாக அடிப்பது வழக்கம். அதேபோல அவர் அடித்ததும் சஹார் சிரித்துக் கொண்டே நழுவி ஓடும் அந்த வீடியோ வைரலாகியுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் தோனி களமிறங்கியபோது தான் எதிரணி என்பதையுமே மறந்து தீபக் சஹார் கைத்தட்டி வரவேற்றுக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K
MS Dhoni giving BAT treatment to Deepak Chahar????pic.twitter.com/2uYGLkFdpy
— ` (@lofteddrive45) March 23, 2025