வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 14 அக்டோபர் 2023 (10:37 IST)

தொடர் வெற்றிகள் எல்லாம் முறியடிக்கப்படும்! – பாகிஸ்தான் கேப்டன் சூசகம்!

இன்று இந்தியா – பாகிஸ்தான் இடையே உலகக்கோப்பை ஒருநாள் போட்டி நடைபெற உள்ள நிலையில் வெற்றிகள் முறியடிக்கப்படும் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் பேசியுள்ளார்.



ஐசிசி உலக கோப்பை போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றன. இன்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே பரபரப்புகள் அதிகமாகி விடுகின்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிகளுக்காக பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையை பொறுத்தவரை பாகிஸ்தான் அணியால் இந்தியாவை வெல்ல முடிந்ததில்லை என்ற ஒரு கூற்று உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டி குறித்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் “கடந்த காலத்தை நினைக்க வேண்டியதில்லை. வருங்காலத்தின் மீது நம்பிக்கை வைப்போம். தொடர் வெற்றிகள் எல்லாமே ஒருநாள் முறியடிக்கப்படும். இன்று என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். முதல் 3 போட்டிகளில் எங்கள் அணி சிறப்பாக விளையாடியுள்ளது. இதே நிலை இனி வரும் போட்டிகளிலும் தொடரும்” என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K