1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Mohammed shami will come back in Bangladesh series

பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுக்கும் முகமது ஷமி?

Mohammed Shami
கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக மிகச்சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தவர் முகமது ஷமி. ஆனால் அதன் பின்னர் காயம் காரணமாக அவர் கிரிக்கெட்டில் இருந்து சில மாதங்கள் விலகி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

கணுக்கால் காயம் காரணமாக அவதிப்படும் அவருக்கு லண்டனில் ஜனவரி மாதம் ஊசி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது காயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதால் அவருக்கு கனுக்காலில் அறுவை சிகிச்சை லண்டனில் நடந்தது.

அதையடுத்து இப்போது அவர் காயத்தில் இருந்து மீண்டெழுந்து வருகிறார். இந்நிலையில் அவர் விரைவில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
இந்திய அணிக்கு இது புதுசு… ஆனா அது தேவைதான் – அஸ்வின் கருத்து!