இந்திய ரசிகர்கள் எனக்குத் தொல்லை தருவார்கள்… பாட் கம்மின்ஸ் புலம்பல்!
ஆஸி வீரர் பேட் கம்மின்ஸ் தலைமையில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஐபிஎல் இறுதிப் போட்டி வரை சென்று ரன்னராக தொடரை முடித்தது . கடந்த சில சீசன்களாக சொதப்பி வந்த ஐதராபாத் அணி இந்த் ஆண்டு பேட் கம்மின்ஸ் வருகையால் புத்துணர்ச்சி பெற்றுள்ளது.
பேட் கம்மின்ஸ் ஆஸி அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டதில் இருந்து அவர் தொட்டதெல்லாம் வெற்றியாகி வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் கடந்த நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது அவர் தலைமையிலான அணி.
இந்நிலையில் இப்போது அவர் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் இந்திய ரசிகர்களால் தான் எதிர்கொள்ளும் தொல்லைகள் குறித்து பேசியுள்ளார். அதில் “இந்திய ரசிகர்கள் என் வீட்டு முகவரியை தெரிந்துகொண்டு வருவார்கள். வந்து எனக்கு ஹாஸ்பிட்டல் செலவு இருக்கிறது. பணம் கொடுங்கள் எனக் கேட்பார்கள். அதுபோல நிறைய சம்பவங்கள் எனக்கு நடந்துள்ளன.
இதைவிட விராட் கோலி ரசிகர்கள் ஒருபடி மேல். அவர் சிறந்த வீரர். ஆனால் எங்களுக்கு எதிராக சதம் அடிப்பதை நான் விரும்பவில்லை எனக் கூறினேன். அதன் பிறகு அவர் ஒரு போட்டியில் சதமடித்தபோது என்னை டேக் செய்து மெஸேஜ்களைக் குவித்துத் தள்ளி தொல்லை கொடுத்தனர்” எனப் புலம்பியுள்ளார்.