1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. India easily won the match against bangladesh

பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அபாரம்… பங்களாதேஷை எளிதாக வென்ற இந்தியா!

இந்தியா
நடந்து வரும் டி 20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் போட்டி நேற்று நடந்தது.

இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 195 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் கோலி, ரிஷப் பண்ட், ஷிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹர்திக் பாண்ட்யா அதிகபட்சமாக 27 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார்.

இதன் பின்னர் ஆடவந்த பங்களாதேஷ் அணி ஆரம்பம் முதலே ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறியது. அதனால் அடித்து ஆடமுயன்று அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 146 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணி சார்பில் பும்ரா, அர்ஷ்தீப் தலா 2 விக்கெட்களும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்களும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை மேலும் பிரகாசமாக்கியுள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுக்கும் முகமது ஷமி?