ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2024 (08:12 IST)

விமான நிலையத்தில் உடைமைகளை இழந்த பாட் கம்மின்ஸ்… மனைவி புலம்பல்!

பேட் கம்மின்ஸ் ஆஸி அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டதில் இருந்து அவர் தொட்டதெல்லாம் வெற்றியாகி வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் கடந்த நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது அவர் தலைமையிலான அணி. அவர் தலைமையில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி இறுதிப் போட்டி வரை வந்தது.

இந்நிலையில் இப்போது அவர் டி 20 உலகக் கோப்பை தொடருக்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளார். இந்த பயணத்தில் அவர் சந்தித்த பல சிக்கல்களை சந்தித்துள்ளார். இதுபற்றி அவர் மனைவி சமூகவலைதளப் பக்கத்தில் புலம்பித் தள்ளியுள்ளார்.

“நாங்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து மூன்று விமானங்கள் பயணித்து பார்படாஸ் வந்தோம். அதில் ஒரு விமானம் ரத்தாகிவிட 50 மணிநேரம் விமான நிலையத்திலேயே சிக்கிக் கொண்டோம். அதன் பின்னர் எப்படியோ ஒரு விமானம் பிடித்து பார்படாஸ் வந்தோம். ஆனால் எங்கள் உடமைகள் எதுவுமே நாங்கள் வந்த விமானத்தில் வரவில்லை. அதன் பின்னர் நாங்கள் புகாரளித்து 3 நாட்களுக்குப் பிறகுதான் அவை கிடைத்தன” எனக் கூறியுள்ளார்.