தொடர்புடைய செய்திகள்
- நான் உலகக் கோப்பைக்காக பக்காவா தயாராகி வந்திருக்கிறேன்… சஞ்சு சாம்சன் நம்பிக்கை!
- விமான நிலையத்தில் உடைமைகளை இழந்த பாட் கம்மின்ஸ்… மனைவி புலம்பல்!
- இந்திய ரசிகர்கள் எனக்குத் தொல்லை தருவார்கள்… பாட் கம்மின்ஸ் புலம்பல்!
- மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிக் கவலையில்லை.. ரியான் பராக் பதில்!
- என் பந்தில் சிக்ஸ் அடித்தால் நான் சிரிக்கவா முடியும்… சர்ச்சைக்குரிய ப்ளையிங் கிஸ் குறித்து ஹர்ஷித் ராணா விளக்கம்!
மீண்டும் சி எஸ் கே அணியில் இணைகிறாரா அஸ்வின்… புதிய பொறுப்பு!
இந்திய அணியின் மூத்த வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாப், டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்காக விளையாடி வருகிறார். அவர் அறிமுகமான தொடக்கத்தில் சில சீசன்களில் சென்னை அணிக்காக ஆடி பிரபலமடைந்தார்.
இந்நிலையில் இப்போது அவருக்கு சி எஸ் கே அணியில் புதிய பொறுப்பு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகரில் புதிதாக அமையவுள்ள செயல்திறன் மையத்துக்காக தலைமை பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அங்குதான் இனி சி எஸ் கே வீரர்கள் பயிற்சியில் ஈடுபாடுவார்கள் என சொல்லப்படுகிறது. மேலும் அவர்களுக்கான ஆலோசனைகளும் அஸ்வின் தலைமையில் வழங்கப்படும் என தெரிகிறது.
சி எஸ் கே அணியில் புதிய பொறுப்பை பெற்றுள்ளதால் அஸ்வின் மீண்டும் சி எஸ் கே அணியால் ஏலத்தில் எடுக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி பேசியுள்ள சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், “அஸ்வினை ஏலத்தில் எடுப்பது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. ஏலத்தில் அன்றைய நிலைமையை பொறுத்தது அது. ஆனால் அவர் இப்போது சிஎஸ்கே அணியின் ஒரு அங்கமாகியுள்ளார்” எனக் கூறியுள்ளார்.