1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Mohammed shami talked about playing for india

என் பசி இன்னும் அடங்கவில்லை… இந்திய அணிக்காக விளையாடுவது முகமது ஷமி கருத்து!

இந்தியா
2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து முழங்கால் காயத்தினால் அவதிப்பட்ட ஷமிக்கு லண்டனில் ஜனவரி மாதம் ஊசி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது காயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதால் அவருக்கு கனுக்காலில் அறுவை சிகிச்சை லண்டனில் நடந்தது.

அதன் பின்னர் பல மாதங்கள் பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சியை மேற்கொண்டு குணமானார். இதையடுத்து ரஞ்சிக் கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடிய அவர் மத்திய பிரதேச அணிக்கு எதிராக 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். ஆனாலும் அவருக்கு காலில் வீக்கம் இருந்ததால் அவர் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் விளையாடவில்லை.

இதையடுத்து அவர் இப்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரில் விளையாட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் கிட்டத்தட்ட 13 மாதங்களுக்குப் பிறகு ஷமி இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளது குறித்து பேசியுள்ள ஷமி “இந்திய அணிக்காக எத்தனைப் போட்டிகளில் விளையாடினாலும்  அது மிகவும் குறைவு என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.  நான் ஓய்வை அறிவித்துவிட்டால் அதன் பின் என்னால் மீண்டும் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட முடியாதே” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
மூன்றே ஓவர்களில் மலேசியா அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி.. அபார வெற்றி..!