திங்கள், 20 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 20 ஜனவரி 2025 (14:49 IST)

சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் இடம்பெறாததால் சிராஜ் எடுத்த அதிரடி முடிவு!

பிப்ரவரி 19ம் தேதி பாகிஸ்தானின் கராச்சியில் சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டிகள் தொடங்கி, பாகிஸ்தான், துபாய் என இரண்டு நாடுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த அணியில் பெரிய ஏமாற்றமாக பார்க்கப்படுவது முகமது சிராஜ் எடுக்கப்படாததுதான். அது குறித்து பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா “பந்து பழையதாகும் போது அவரின் பவுலிங் எடுபடவில்லை. அதனால் அவருக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங்கை எடுத்துள்ளோ,” எனக் கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த டெஸ்ட் தொடர்களில் சிராஜ் சிறப்பாக செயல்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலர் சிராஜ்தான். அதனால் அவரை எடுத்திருக்க வேண்டும் என்ற விமர்சங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் மீண்டும் தன்னை இந்திய அணிக்குள் கொண்டுவர சிராஜ் தற்போது உள்ளூர் போட்டிகளில் விளையாட உள்ளாராம். ரஞ்சி கோப்பை தொடரில் இமாச்சலப் பிரதேச அணிக்கு எதிராக அவர் விளையாடவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.