தொடர்புடைய செய்திகள்
- சதமடித்து விட்டு பாக்கெட்டில் இருந்து பேப்பரை எடுத்துக் காட்டிய அபிஷேக் ஷர்மா.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!
- ருத்ரதாண்டவம் ஆடிய அபிஷேக்.. பஞ்சாப் பவுலர்களை சிதறடைத்து அபார சதம்..!
- எங்கள் பேட்ஸ்மேன்கள் எல்லாப் பந்துகளையும் சிக்ஸ் அடிக்கும் திறன் கொண்டவர்கள் இல்லை- ஓபனாக பேசிய தோனி!
- Power Playயில் மோசமான தொடக்கம்.. 20 டாட் பால்கள்.. 2 விக்கெட்டுக்கள்.. தலைநிமிராத சிஎஸ்கே..!
- டாஸில் தோல்வி அடைந்த தோனி.. கொல்கத்தா எடுத்த முடிவு என்ன? ஆடும் 11 பேர்கள் யார் யார்?
வாரி வழங்கும் வள்ளல் ஆன ஷமி… நேற்றையப் போட்டியில் படைத்த மோசமான சாதனை!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அசத்தலான தொடக்கம் அளித்த பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் 66 ரன்களுக்குள் முதற் விக்கெட்டின் இழப்பை சந்தித்தனர். பின்பு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பிரப்சிம்ரன் சிங் இணைந்து ரன்களை குவிக்க தொடங்கினர். ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 82 ரன்கள் அடித்து பஞ்சாப் அணிக்கு வலுவான ஆதாரம் அளித்தார். இதன் காரணமாக பஞ்சாப் அணி 245 ரன்கள் சேர்த்தது.
ஹைதராபாத் அணி 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் அபாரமான தொடக்கம் அளித்தனர். அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 141 ரன்கள் அடித்து மிகப்பெரிய சாதனை படைத்தார். அவர் பஞ்சாப் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இதனால் சன் ரைசர்ஸ் அணி மிக எளிதாக அந்த இமாலய இலக்கை எட்டியது.
இந்த போட்டியில் ஐதராபாத் அணி பௌலர் ஷமி 4 ஓவர்கள் வீசி மொத்தம் 75 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இது ஐபிஎல் தொடரில் ஒரு பவுலர் வழங்ல்கிய மிக அதிகமான ரன்களில் இரண்டாமிடமாகும். முதலிடத்தில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 76 ரன்கள் கொடுத்து முதலிடத்தில் உள்ளார்.
அடுத்த கட்டுரையில்