வெள்ளி, 18 ஏப்ரல் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 13 ஏப்ரல் 2025 (09:28 IST)

சதமடித்து விட்டு பாக்கெட்டில் இருந்து பேப்பரை எடுத்துக் காட்டிய அபிஷேக் ஷர்மா.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. பஞ்சாப் கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அசத்தலான தொடக்கம் அளித்த பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் 66 ரன்களுக்குள் முதற் விக்கெட்டின் இழப்பை சந்தித்தனர். பின்பு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பிரப்சிம்ரன் சிங் இணைந்து ரன்களை குவிக்க தொடங்கினர். ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 82 ரன்கள் அடித்து பஞ்சாப் அணிக்கு வலுவான ஆதாரம் அளித்தார். இதன் காரணமாக பஞ்சாப் அணி 245 ரன்கள் சேர்த்தது.

ஹைதராபாத் அணி 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் அபாரமான தொடக்கம் அளித்தனர். அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 141 ரன்கள் அடித்து மிகப்பெரிய சாதனை படைத்தார். அவர் பஞ்சாப் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இதனால் சன் ரைசர்ஸ் அணி மிக எளிதாக அந்த இமாலய இலக்கை எட்டியது.

இந்த போட்டியில் அபிஷேக் ஷர்மா சதமடித்ததும் தன் பாக்கெட்டில் இருந்து பேப்பர் ஒன்றை எடுத்துக் காட்டினார். அதில் “இது ஆரஞ்ச் ஆர்மிக்காக” என எழுதப்பட்டிருந்தது. தொடர்ந்து சன் ரைசர்ஸ் அணிக்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்காக இந்த சதத்தை அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.