சிறந்த பினிஷர் தோனி - மைக்கேல் வாகன் கருத்து

dhoni
Last Updated: திங்கள், 5 மார்ச் 2018 (12:57 IST)
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன், தோனி ஒருநாள் போட்டியின் சிறந்த பினிஷர் என தெரிவித்துள்ளார்.
 
மைக்கல் வாகனிடம் டுவிட்டரில் ரசிகர்கள், உஙகள் கணவு ஒருநாள் போட்டியின் அணியில் பினிஷராக தோனி அல்லது பெவன் யார் இருப்பார்? என கேள்வி எழுப்பினர்.
 
ஆஸ்திரேலிய வீரர் மைக்கல் பெவன் ஒருநாள் போட்டியில் மிகச்சிறந்த பினிஷராக இருந்தார். இவர் 232 போட்டிகள் விளையாடி 6912 ரனகள் எடுத்திருந்தார் இவருடன் தோனியை ஒப்பிட்டு யார் சிறந்த பினிஷர் என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
 
இதற்கு மைக்கல் வாகன் தோனி தான் எனது ஒருநாள் அணியில் பினிஷராக இருப்பார் என டுவிட்டரில் பதிலளித்திருந்தார். இந்த பதில் பதிவை கண்டு இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
dhoniஇதில் மேலும் படிக்கவும் :