தோனி இல்லாமல் ரோகித் தலைமையில் களமிறங்கும் இளம்படை
முத்தரப்பு டி20 தொடரில் தோனி, கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் வரும் மார்ச் 6ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் தோனி ஆகியோருக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தோனிக்கு பதில் தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பிடித்துள்ளார். தவான் துணை கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். தீபக் ஹூடா, வாஷ்ங்டன் சுந்தர், விஜய் ஷங்கர் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
தோனியும் அணியில் இல்லாத நிலையில் ரோகித் சர்மா பெரும் சவாலை சந்திக்க உள்ளார்.