1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Mayank agarwal joined Karnataka team

மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட மயங்க் அகர்வால்.. ரஞ்சி தொடருக்காக மீண்டும் அணியில் இணைப்பு!

மயங்க் அகர்வால்
இந்திய அணிக்காக விளையாடிய மயங்க் அகர்வால் சமீபகாலமாக வாய்ப்புக் கிடைக்காமல் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது உள்ளூர் தொடரான ரஞ்சிக் கோப்பையில் கர்நாடக அணிக்குக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.  ரஞ்சி போட்டியில் விளையாடுவதற்காக அவர் திரிபுராவின் அகர்தலாவுக்கு விமானத்தில் சென்றுள்ளார்.

அப்போது அவர் இருக்கைக்கு முன்னால் வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீர் கொடுத்துள்ளார். அதன் பின்னர் அவர் வாய் மற்றும் வயிற்றில் எரிச்சலை உணர்ந்துள்ளார். விமானத்திலேயே வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அகர்தலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சோதனையில் தெரியவந்துள்ளது. ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட அவர் அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக சொல்லப்பட்டது.

ஆனாலும் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த அவர் இப்போது மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டு கர்நாடக அணியோடு இணைந்துள்ளார். அடுத்து தமிழக அணியோடு நடக்க உள்ள போட்டியில் அவர் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
அந்த பையன இயல்பான ஆட்டத்த விடுங்கப்பா... ஜெய்ஸ்வால் குறித்து கம்பீர் கருத்து!