வெள்ளி, 4 அக்டோபர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 9 மார்ச் 2024 (08:08 IST)

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஒரு விக்கெட் காலி… ஆஸி வீரர் விலகல்!

ஐபிஎல் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோத, இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது.

இந்த சீசனுக்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. பெரும்பாலான வீரர்கள் தங்கள் அணியோடு இணைந்து பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த முறை ரன்னர் அப் அணியான குஜராத் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் ஆரம்ப சில போட்டிகளில் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஆஸ்திரேலியாவில் நடக்கும் உள்ளூர் போட்டித் தொடரில் அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளதால் அந்த தொடரை முடித்துவிட்டுதான் அவர் குஜராத் அணியோடு இணைவார் என சொல்லப்படுகிறது.