தொடர்புடைய செய்திகள்
- மகளிர் ஐபிஎல்: குஜராத் அணியை அடித்து நொறுக்கிய பெங்களூரு.. புள்ளிப்பட்டியலில் முதலிடம்..!
- இன்று டெல்லி கேப்பிட்டல், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்! – தொடங்குகிறது WPL T20!
- Mumbai Indians அணியின் பயிற்சியாளர் விளக்கத்திற்கு ரோஹித் சர்மாவின் மனைவி மறுப்பு
- மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மேலும் பின்னடைவு… இந்த சீசனில் நட்சத்திர வீரர் விளையாட மாட்டாரா?
- குஜராத் அணிக்கு 100 கோடி கொடுத்து ஹர்திக் பாண்ட்யாவை வாங்கியதா மும்பை இந்தியன்ஸ்?
3.6 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட தோனி ஊரைச் சேர்ந்த வீரர்.. விபத்தில் சிக்கிய சோகம்!
சமீபத்தில் நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் குஜராத் அணியால் வாங்கப்பட்ட ஜார்கண்ட வீரர் ராபின் மின்ஸ் ஐபிஎல் தொடரில் நுழையும் முதல் பழங்குடியின வீரர் என்ற பெருமையை பெற்றார். இவர் தோனியின் ஊரான ராஞ்சியை சேர்ந்தவர் ஆவார்.
குஜராத் அணியால் ரூ.3.6 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார் ராபின் மின்ஸ். ரூ.20 லட்சம் அடிப்படை விலை கொண்ட 21 வயதாகும் மின்ஸை எடுக்க, மும்பை குஜராத் இடையே கடும் போட்டி நிலவியது. இவரது தந்தை விமான நிலையத்தில் காவலாளியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் 20 நாட்களில் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில் இப்போது ராபின் மின்ஸ் இரு சக்கர வாகனத்தில் விபத்தில் சிக்கியுள்ளார். பயிற்சிக்காக தன்னுடைய பைக்கில் சென்ற அவர் எதிரே வந்த மற்றொரு இருசக்கரவாகனத்தில் மோதியுள்ளார். அதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்கு முழங்காலில் அடிபட்டுள்ளதால் அவர் இந்த சீசனில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.