1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Martin guptil out for the match against india

இந்தியாவுக்கு எதிரான போட்டி… நியுசிலாந்து முக்கிய பேட்ஸ்மேன் விலகல்!

இந்தியா
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டி வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்க உள்ளது.

இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்டாலும் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்துள்ளது. அதனால் அடுத்து நியுசிலாந்து அணிக்கெதிரான போட்டி இந்தியாவுக்கு வாழ்வா சாவா போட்டியாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட இந்த போட்டியில் தோற்கும் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியாத சூழல் உள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நியுசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்தில் விளையாடமாட்டார் என சொல்லப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவருக்கு ஏற்கனவே இருந்த காயம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் அவர் ஒரு வாரத்துக்கு மேல் ஓய்வில் இருக்கவேண்டியது அவசியம் என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
இங்கிலாந்து பவுலர்களுக்கு எதிராக திணறும் பங்களாதேஷ் பேட்ஸ்மேன்கள்!