திங்கள், 30 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 26 அக்டோபர் 2021 (17:48 IST)

இந்தியாவின் தோல்விக்கு இதுதான் காரணம்: இன்சமாம் உல் ஹக் பேட்டி!

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த நிலையில் இந்தியாவின் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இன்சமாம் உல் ஹக் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
அவர் இதுகுறித்து அளித்த பேட்டியில் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவை இறக்கியது மிகப்பெரிய தவறு என்றும் அவர் பந்து வீசும் திறன் இல்லாத நிலையில் அவரை இறக்கியது இந்திய அணி செய்த தவறு என்றும் கூறியுள்ளார் 
 
அப்படியே ஹர்திக் பாண்டியாவை அணியில் இறக்கியிருந்தாலும், ரிஷப் பண்ட் அவுட்டானதும் ஹர்திக் பாண்டியாவை களமிறக்கி இருக்க வேண்டும் என்றும் ஜடேஜாவை இறங்கியது இந்திய அணி செய்த இன்னொரு தவறு என்றும் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூரை சேர்த்து இருக்கலாம் என இந்திய கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வந்ததையே இன்சமாம் உல் ஹக் அவர்களும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.