செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 26 அக்டோபர் 2021 (21:33 IST)

பாகிஸ்தான் அபார பந்துவீச்சு: 135 மட்டுமே இலக்கு!

இன்று நடைபெற்று வரும் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி அபாரமாக பந்து வீசியது.  இதன்காரணமாக நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது 
 
பாகிஸ்தானின் ஹாரிஸ் ரஃப் மிக அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 135 என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பாபர் ஆசாம் மற்றும் முஹம்மது ரிஸ்வான் ஆகிய இருவருமே போட்டியை முடிந்த நிலையில் அதேபோன்று இன்றும் முடிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.