தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல் திருவிழாவில் இன்று மும்பை vs லக்னோ மோதல்… வெற்றிக்கு திரும்புமா ஹர்திக் & கோ!
- மும்பை இந்தியன்ஸுக்கு கேப்டன் ஆக ஆசைப்பட்டு இந்திய அணி இடமே காலியாகிடும் போலயே- பாண்ட்யாவின் பரிதாப நிலை!
- “அவரை அட்டாக் பண்ணி இருக்கணும்… அங்கதான் போட்டி எங்கள விட்டு போயிடுச்சு“ தோல்விக்குக் காரணம் சொன்ன ஹர்திக் பாண்ட்யா!
- முதல் ஆளாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு துண்டு போட்டு வைத்த ராஜஸ்தான் ராயல்ஸ்!
- கடைசி வரை போராடி பரிதாபமாக தோற்ற மும்பை இந்தியன்ஸ்! – டெல்லி அணி த்ரில் வெற்றி!
பந்துவீச்சை தேர்வு செய்த லக்னோ.. அதிரடி காட்டுமா மும்பை இந்தியன்ஸ்! – ப்ளேயிங் 11 அப்டேட்!
இன்றைய ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் நிலையில் டாஸ் வென்ற லக்னொ அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
இந்த சீசனில் மும்பை – லக்னோ மோதும் முதல் போட்டி இதுவாகும். 9 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகள் வைத்துள்ள லக்னோ அணி ப்ளே ஆப் செல்வதற்கான தீவிர போராட்டத்தில் உள்ளது. மும்பை அணி 9 போட்டிகளில் 3ல் மட்டுமே வென்றுள்ள நிலையில் இனிவரும் 5 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே ப்ளே ஆப் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.
இன்று மும்பை இந்தியன்ஸின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மாவின் பிறந்தநாள் என்பதால் மும்பை அணி அவருக்கு வெற்றியை பரிசாக அளிக்க முயலும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, நெஹல் வதேரா, டிம் டேவிட், முகமது நபி, ஜெரால்ட் கொட்ஸி, பியூஸ் சாவ்ல், ஜாஸ்ப்ரிட் பும்ரா
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கே எல் ராகுல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், தீபக் ஹூடா, நிகோலஸ் பூரன், அஸ்டன் டர்னர், ஆயுஷ் பதோனி, க்ருனால் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக், மொஷின் கான், மயங்க் யாதவ்
Edit by Prasanth.K