செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (18:34 IST)

ரொம்ப ஆடக்கூடாது.. ஹர்ஷித் ராணா விளையாட தடை, அபராதம்! – ஐபிஎல் நிர்வாகம் அதிரடி முடிவு!

Harshit Rana
நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக விளையாடிய கொல்கத்தா அணியின் வீரர் ஹர்ஷித் ராணா ஐபிஎல் விதிமுறைகளை மீறியதாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது.



நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 153 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சேஸிங்கில் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16.3 ஓவர்களில் 157 ரன்களை குவித்து வெற்றிப்பெற்றது.

இந்த போட்டியில் கொல்கத்தா அணி வீரர் ஹர்ஷித் ராணா 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக விளையாடியிருந்தார். ஆனால் டெல்லி வீரர் அபிஷேக் பொரெலை ஸ்டம்ப் அவுட் செய்த ஹர்ஷித் ராணா அவரை நோக்கி சர்ச்சைக்குரிய உடல்மொழியை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.


இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ள ஐபிஎல் நிர்வாகம் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியின் 100 சதவீத சம்பளத்தையும் அபராதமாக விதித்ததுடன், அடுத்த ஒரு போட்டியில் விளையாடவும் தடை விதித்துள்ளது. ஹர்ஷித் ராணா இப்படி செய்வது இது முதல்முறையல்ல. முன்னதாக சன்ரைசர்ஸுடன் விளையாடியபோது அபிஷேக் சர்மாவை அவுட் செய்து இதுபோல சைகைகளை செய்ததால் முதல் முறை அபராதம் விதிக்கப்பட்டார். அப்படியும் அதை திருத்திக் கொள்ளாமல் மீண்டும் அதையே செய்ததால் தற்போது ஐபிஎல் நிர்வாகம் தண்டனையை கடுமைப்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K