தொடர்புடைய செய்திகள்
- அஸ்வின் விக்கெட் எடுக்காததற்கு இதுதான் காரணம்… விமர்சனம் செய்த சேவாக்!
- டெல்லி கேப்பிடல்ஸ்க்கு எதிராக அசால்ட் வெற்றி… ப்ளே ஆஃப் செல்ல ஆயத்தமான கே கே ஆர்!
- சரிசமமாக நிற்கும் இரு அணிகள்.. 2வது இடத்திற்கு போட்டி! அதிசயம் நிகழ்த்தப்போவது யார்? – இன்று KKR vs DC மோதல்!
- கோலியின் ஸ்ட்ரைக் ரேட் விமர்சனம் குறித்து கருத்து தெரிவித்த கம்பீர்!
- அரைசதம் வரைக்கும் மாணிக்கம்… அதுக்கப்புறம் பாட்ஷா – வில் ஜாக்ஸ் படைத்த புதிய சாதனை!
ஐபிஎல் திருவிழாவில் இன்று மும்பை vs லக்னோ மோதல்… வெற்றிக்கு திரும்புமா ஹர்திக் & கோ!
ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் கடந்த மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இதுவரை 46 போட்டிகள் முடிந்துள்ளன இப்போது லீக் சுற்றின் இரண்டாவது பாதி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுவரையிலான போட்டிகளின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.
இந்நிலையில் இன்று லக்னோவில் நடக்கும் வாஜ்பாய் மைதானத்தில் லக்னோ அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புதிய கேப்டனோடு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்று ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியோ 9 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியை அந்த அணி வெல்லும் பட்சத்தில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறும். ஆனால் இந்த போட்டியில் மும்பை அணி வென்றால்தான் ப்ளே ஆஃப்க்கு செல்லும் வாய்ப்பை தக்கவைக்க முடியும். அதனால் இன்றைய போட்டி பரபரப்பான ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கலாம்