திங்கள், 24 மார்ச் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 24 மார்ச் 2025 (12:14 IST)

ருதுராஜ் கையில் இருந்த மர்ம பொருள்? பால் டேம்பரிங் செய்ததா CSK? - பரபரப்பு வீடியோ!

Ruturaj Gaikwat ball tampering

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கையில் இருந்த மர்ம பொருள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

 

நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்த நிலையில், சேஸிங் வந்த சிஎஸ்கே 19.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

 

அதை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சென்னை அணி பந்துவீசியபோது கலீல் அகமது தனது பாக்கெட்டில் இருந்து மர்ம பொருள் ஒன்றை எடுத்து மறைத்துக் கொண்டே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கொடுக்கிறார், அவரும் யாருக்கும் தெரியாமல் அதை பாக்கெட்டுக்குள் வைத்து செல்கிறார்

 

இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் சிஎஸ்கே அணி பால் டேம்பரிங் செய்துள்ளதாக மற்ற அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளனர். முன்னதாக சூதாட்டத்தில் சிக்கிய சிஎஸ்கே அணி 2 ஆண்டுகளுக்கு விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது. அதுபோல பால் டேம்பரிங் செய்வது குற்றமாக கருதப்படுவதால் அவ்வாறு செய்பவர்களுக்கு விளையாட தடை விதிப்பது கிரிக்கெட்டின் சர்வதேச விதிகளில் ஒன்றாக உள்ளது.

 

இந்நிலையில் இந்த வீடியோவில் கெய்க்வாட்டிடம் உள்ள அந்த பொருள் என்ன? சிஎஸ்கே பால் டேம்பரிங் செய்ததா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K