1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Krunal pandya stopped in Mumbai airport

அளவுக்கு அதிகமான தங்க நகைகள்… விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்ட பாண்ட்யா!

க்ருணாள் பாண்ட்யா
மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களில் ஒருவரான க்ருணாள் பாண்ட்யா அளவுக்கு அதிகமாக தங்க நகைகளைக் கொண்டு வந்ததால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்ற மும்பை அணி வீரர்கள் அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர். அதில் இடம்பெற்றிருந்த க்ருனாள் பாண்ட்யா விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதற்குக் காரணம் அவர் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தங்க நகைகளை அங்கிருந்து கொண்டு வந்ததுதான் என சொல்லப்படுகிறது.

இது பற்றி விமான நிலைய அதிகாரிகள் குருனாள் பாண்ட்யாவிடம் விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல் சிறப்பாக நடத்தியவர்களுக்கு பாராட்டு – கங்குலி பெயரை விட்ட ரவி சாஸ்திரி!