வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 12 நவம்பர் 2020 (19:47 IST)

கதை திருட்டு பிரச்சனையால் தள்ளிப்போன பூமி திரைப்பட வெளியீடு!

ஜெயம் ரவியின் 25 ஆவது திரைப்படமான பூமி பொங்கல் அன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது.

ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ திரைப்படம் தீபாவளியை ஒடிடி யில் ரிலீஸாக இருந்தது. ஆமால் திரைப்படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் ஒருவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளதை அடுத்து இதுகுறித்து பாக்யராஜ் தலைமையிலான குழு அந்த குற்றச்சாட்டு உண்மைதான் என அறிவித்து உதவி இயக்குனருக்கு கடிதம் கொடுத்தது. இந்நிலையில் இது சம்மந்தமான பஞ்சாயத்து இப்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் இப்போது பொங்கலுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஹாட்ஸ்டார்  ப்ளஸ் டிஸ்னி ஓடிடி தளத்தில் வெளியாகும் எனவும்  தொலைக்காட்சி உரிமை விஜய் தொலைக்காட்சி கைப்பற்றியதாகத் தெரிகிறது.