திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 12 நவம்பர் 2020 (17:03 IST)

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்...ஆஸ்திரேலிய வீரர்கள் அறிவிப்பு...

சமீபத்தில்தான் ஐபிஎல் 2020 தொடர் முடிவடைந்துள்ளது.  இனி அடுத்து எப்போது கிரிக்கெட் என்று கேட்கும் வகையில் ஐபிஎல் தொடர் அமைந்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள், 2 இருபது ஓவர் போட்டிகளிலும், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

வரும் 27 ஆம் தேதி இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. எனவே வீரர்கள் ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர்.

ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், மிட்ஷெல் ஸ்வீஸன், மாத்யூ வேட்,  டேவிட் வார்னர்,  ஜோ பர்ன்ஸ்,

புக்கோவ்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார், சீன் அபாட்,  பாட் கம்மின்ஸ் ,ம்  கேமரூன், கிரீன், மைக்கெட்ல் நீஸர்,  டிம்  பெய்ன், மமஸ் லாபுஷேன், ஹேசல்வுட், மமஸ்  லாபுஷேன் நாதன் லியோன் உள்ளிட்ட வீரர்கள் தேர்வு செய்ப்பட்டுள்ளனர்.

முதல் டெஸ்ட் போட்டி வரும் 17 ஆம் தேதி தொடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.