வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 12 நவம்பர் 2020 (19:58 IST)

இந்திய வெப் சீரிஸ்களில் சாதனைப் படைத்த மிர்சாபூர்… ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

கடந்த மாதம் வெளியான மிர்சாபூர் வெப் சீரிஸ் பார்வையாளர்களால் அதிகம் பார்க்கப்படட் நிலையில் அடுத்த சீசன் விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்தியில் வெளியான மிர்சாபூர் இணையத்தொடர் அமேசான் ப்ரைம் தளத்தில் பல்வேறு பிராந்திய மொழிகளின் டப்பிங்கோடு பார்க்க கிடைத்தது. கட்டற்ற வன்முறை, வார்த்தைக்கு வார்த்தை கெட்ட வார்த்தை கவர்ந்திழுக்கும் செக்ஸ் காட்சிகள் என இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தது மிர்சாபூர் சீசன்1. இந்நிலையில் அதன் இரண்டாவது சீசன் கடந்த மாதம் வெளியானது. அது மிகப்பெரிய அளவில் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு இந்தியாவில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட சீரிஸ் என்ற சாதனையை படைத்தது.

இந்நிலையில் அமேசான் ப்ரைம் தளம் ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்து சீசன் 3 விரைவில் உருவாகும் எனத் தெரிவித்துள்ளது.