தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக ஏற்க மறுக்கும் கொல்கத்தா ரசிகர்கள்

karthik
Last Updated: திங்கள், 5 மார்ச் 2018 (19:50 IST)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக பொறுப்பேற்ற தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கு கொல்கத்தா ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்திய கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் முதல் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான வீரர்களுக்கான ஏலம் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்று முடிந்தது.
 
இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டனாக தமிழக வீரர் அஸ்வின் நியமிக்கப்பட்டார் . தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்  நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனால் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டதுக்கு கொல்கத்தா ரசிகர்கள் டுவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :