வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 2 மார்ச் 2018 (19:09 IST)

டி.எஸ்.பி ஆக மாறிய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன்

இந்திய மகளிர் கிரிக்கெட் டி20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அவருடைய சிறப்பான செயல்பாட்டை கெளரவிக்கும் வகையில் பஞ்சாப் மாநில காவல்துறையில் டி.எஸ்.பி பதவி அளிக்க தயாராக இருப்பதாக பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர்சிங் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

ஆனால் ஹர்மன்ப்ரீத் கவுர் ஏற்கனவே ரயில்வே துறையில் உயரதிகாரியாக பணியாற்றியதால் உடனே டிஎஸ்பி பொறுப்பை ஏற்க முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில் தன்னை பணியில் இருந்து விடுவிக்கும்படி ஹர்மன்ப்ரீத் கவுர், ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதினார். பஞ்சாப் முதல்வரும் இதற்கு பரிந்துரை செய்ததால் அவர் சமீபத்தில் ரயில்வே பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதனையடுத்து இன்று அவர் பஞ்சாப் மாநில காவல் துறையில் துணை டி.எஸ்.பி பணியில் இணைந்துள்ளார். அவருக்கு முதல்வர் அம்ரீந்தர் மற்றும் மாநில டி.ஜி.பி சீருடையில் ஸ்டாரை அணிவித்து கெளரவித்தனர்.