1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Kohli will have to do this sanjay bangar advice

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

கோலி
2024 ஆம் ஆண்டு இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் கோலிக்கு ஒரு சோகமான ஆண்டாக உள்ளது. இந்த ஆண்டில் அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 25 ரன்கள்தான் சேர்த்து வருகிறார். விரைவில் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள நிலையில் கோலியின் ஃபார்ம் கவலையளிக்கிறது.

ஆனால் ஆஸ்திரேலியாவில் எப்போதுமே கோலி மிகச் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்து வந்துள்ளார். அதனால் அவர் தன்னுடைய ஃபார்மை மீட்டுக்கொள்ள இந்த தொடர் உதவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் டெஸ்ட்டில் அடித்த ஒரு சதத்தைத் தவிர மற்ற இன்னிங்ஸ்களில் மோசமாக ஆடி சொதப்பி வருகிறார்.

இந்நிலையில் கோலியின் ஆட்டத்திறன் குறித்துப் பேசியுள்ள சஞ்சய் பாங்கர் “நாம் ஒரு பேட்ஸ்மேனாக இருக்கும்போது ஆட்டத்துக்கு நம்மைக் கொஞ்சம் ஒப்புக்கொடுக்க வேண்டும். பந்தை தேடி செல்லாமல் பவுலர் நம்மை நோக்கிக் கவனம் செலுத்தும் படி வரவழைக்க வேண்டும். கோலி போன்ற பெரிய பேட்ஸ்மேனால் அதை செய்ய முடியும். அவர் ரன்களே சேர்க்காமல் இல்லை. மூன்று இன்னிங்ஸ்களுக்கு முன்னால்தான் அவர் ஒரு அபாரமான சதத்தை அடித்துள்ளார்” எனப் பேசியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!