வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 5 செப்டம்பர் 2022 (14:44 IST)

“நான் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதும் தோனி மட்டுமே…” விராட் கோலி நெகிழ்ச்சி!

விராட் கோலி ஆசியக் கோப்பை தொடரில் தனது இழந்த பார்மை மீட்டு வருகிறார்.

இந்த தொடரில் விளையாடிய 3 போட்டிகளில் அவர் இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்துள்ளார். நேற்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 60 ரன்கள் சேர்த்து கலக்கினார். இதையடுத்து போட்டிக்குப் பின்னர் அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது முன்னாள் கேப்டன் தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

அப்போது "நான் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியதும், ஒருவரிடமிருந்து மட்டுமே எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது, அந்த நபர் எம்எஸ் தோனி. வேறு யாரும் எனக்கு செய்தி அனுப்பவில்லை. பலரிடம் எனது எண் உள்ளது. ஆனால் அவர்கள் என்னிடம் பேசவே இல்லை. அவர் மீதான என் மரியாதை உண்மையானது” எனக் கூறியுள்ளார்.