செவ்வாய், 6 ஜூன் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (14:35 IST)

விக்ரமனின் மகன் கோலிவுட்டில் அறிமுகம் – Hitlist ஹிட் ஆகுமா?

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா அறிமுகமாகும் ஹிட்லிஸ்ட் திரைப்பட அறிமுக  விழா நடைபெற்றது.


தெனாலி, கூகுள் குட்டப்பா படங்களுக்கு பிறகு,  RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது “ஹிட்லிஸ்ட்”திரைப்படம். RK Celluloids சார்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில்,  மூத்த இயக்குநர் விக்ரமன் அவர்களின் மகன் விஜய் கனிஷ்கா நடிகராக அறிமுகமாகும் திரைப்படம்  “ஹிட்லிஸ்ட்”.

நடிகர் சரத்குமார் முக்கிய கதாப்பத்திரம் ஏற்றிருக்கும் இப்படத்தின் அறிமுக விழா மற்றும் பூஜை, இன்று எண்ணற்ற  திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் புது வசந்தம் புதிய சரித்திரம் படைத்து பல புதிய இளம் இயக்குநர்கள் உருவாக காரணாமாயிருந்த இயக்குநர் விக்ரமன் அவர்களின் மகன் விஜய் கனிஷ்கா திரையுலகில் நடிகராக அறிமுகமாகிறார். கமர்ஷியல் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை கமர்ஷியல் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் RK Celluloids நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இயக்குநர்கள் சூர்யகதிர், கார்த்திகேயன் இணைந்து இயக்குகிறார்கள்.
 

இப்படத்தின் பூஜையில் இன்று திரை பிரபலங்கள் RB சௌத்திரி, சத்யஜோதி தியாகராஜன், PL தேனப்பன் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் எழில்  கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன், எஸ் ஏ சந்திரசேகர், மனோபாலா, லிங்குசாமி, ஏ ஆர் முருகதாஸ், சீனு ராமசாமி, வெற்றிமாறன்,  பிரபு சாலமன், பாண்டியராஜன், ஆர் கண்ணன், சரண், ரமேஷ் கண்ணா,  பேரரசு, ராஜகுமாரன், தேவயானி, ஜெயப்பிரகாஷ்  உட்பட பலர் கலந்துகொண்டு, நடிகர் விஜய் கனிஷ்காவை வாழ்த்தியதுடன்,  படம் வெற்றிபெற  படக்குழுவினரை வாழ்த்தினர்.

இப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ஜனரஞ்சகமாக, காமெடி ஆக்சன் கமர்ஷியல் என  அனைத்து அம்சங்களும் நிறைந்த திரைப்படமாக உருவாகவுள்ளது. படம் குறித்த  மற்ற விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.