1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Kohli surpassed ponting international record

ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

கோலி
விராட் கோலி இன்று வங்கதேச அணிக்கெதிராக சதம் அடித்து அசத்தினார்.

சர்வதேச போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாக மோசமாக விளையாடி வந்த விராட் கோலி, 2022 ஆம் ஆண்டில் மீண்டும் தன்னுடைய பார்முக்கு வர தொடங்கியுள்ளார்.

டி 20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதமடித்த அவர், இன்று வங்கதேச அணிக்கு எதிராக சதமடித்து அசத்தியுள்ளார். இது சர்வதேச போட்டிகளில் 72 ஆவது சதத்தை நிறைவு செய்தார்.

இதன் மூலம் பாண்டிங்கின் 71 சதங்கள் என்ற சாதனையை முறியடித்துள்ளார். அவருக்கு முன்பாக சச்சின் மட்டுமே 100 சதங்களோடு முதல் இடத்தில் உள்ளார்.
அடுத்த கட்டுரையில்
வங்கதேசத்துக்கு 410 ரன்கள் இலக்கு.. இந்திய பேட்டிங் அபாரம்!