ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 10 டிசம்பர் 2022 (15:10 IST)

2nd ODI: 3வது ஒரு நாள் போட்டியில் விராட் கோலி சதம்

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் இஷான் கிஷான் இரட்டை சதம் அடித்த நிலையில்  விராட் கோலியும் 44 வது சதம் அடித்துள்ளார், இவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இன்றைய போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச தொடங்கிய நிலையில் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் தவான் 3 ரன்களில் அவுட் ஆகி விட்டாலும் விராத் கோலி மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் நிலைத்து நின்று ஆடினர்.

இந்த நிலையில்,  இஷான் கிஷான் 123 பந்துகளுக்கு 210 ரன்கள் தன் பெஸ்டை வெளிப்படுத்தினார்.

அதேபோல் ஒரு  நாள் போட்டியில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு, விராட்கோலி 91 பந்துகளில் 113 ரன்கள் அடித்து அசத்தினார். இவர்கள் இருவரும், வங்கதேச அணிக்கு சிம்மசொப்பனமாக இருந்தனர்.இதையடுத்து, தற்போது கே எல் ராகுலும், வாஷிங்டன் சுந்தரும் விளையாடி வருகின்றனர்.

தற்போது வரை இந்திய அணி 42.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்கள் அடித்துள்ளது.

Edited By Sinoj