வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (14:42 IST)

டக் அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றிய கோலி! இந்திய அணி அதிர்ச்சி தொடக்கம்!

50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணி இதுவரை விளையாடிய போட்டிகளில் 5க்கு 5 வெற்றியுடன் இந்திய அணி 2வது இடத்தில் உள்ளது.

இதையடுத்து நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியுடன் இன்று லக்னோவில் மோதுகிறது. இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 1 போட்டி மட்டுமே வென்று இங்கிலாந்து கடைசி இடத்தில் உள்ளது.

டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினாலும் தொடக்க ஆட்டக்காரரான கில்லின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே இழந்துள்ளது. கிறிஸ் வோக்ஸின் பந்துவீச்சில் 9 ரன்களுக்கு பவுல்ட் ஆகி வெளியேறினார். 

அதையடுத்து வந்த இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, ரன்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். தற்போது இந்திய அணி 29 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து விளையாடுகிறது.