வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (13:46 IST)

இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு! – இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை!

ENG vs IND
இன்று நடைபெறும் உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து – இந்தியா அணிகள் மோதிக் கொள்கின்றன.



உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இதுவரையிலான போட்டிகளில் 5க்கு 5 வெற்றியுடன் இந்திய அணி 2வது இடத்தில் உள்ளது. 5 போட்டிகளில் 1 போட்டி மட்டுமே வென்று இங்கிலாந்து கடைசி இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று இந்த இரு அணிகளும் மோதிக் கொள்கின்றன. தற்போது டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் இரு அணிகளிலுமே ப்ளேயிங் 11 வீரர்கள் எந்த மாற்றமும் இன்றி தொடர்கின்றனர்.

இந்திய அணி : ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கே எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகம்மது ஷாமி, ஜாஸ்பிரித் பூம்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

இங்கிலாந்து அணி: ஜானி பேர்ஸ்டோ, டாவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டன், மொயின் அலி, கிரிஸ் வாக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷித், மாட்க் வுட்

Edit by Prasanth.K