திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (09:12 IST)

வலைப்பயிற்சியில் காயமடைந்த ரோஹித் ஷர்மா.. இன்றைய போட்டியில் விளையாடுவாரா?

இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளையும் வென்றுள்ளது. இந்நிலையில் இன்று லக்னோவில் நடக்க உள்ள போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இன்றைய போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

இதற்காக இரு அணிகளும் லக்னோவில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று வலைப் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு கையில் பந்துபட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து வலியால் அவதிப்பட்ட அவருக்கு இந்திய அணியின் பிஸியோதெரபிஸ்ட் சிகிச்சையளித்தார்.

இதையடுத்து இன்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்த போது அதே கையில் அடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.