1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 27 டிசம்பர் 2023 (12:29 IST)

ரூ.138 கோடி மதிப்பில் புதிய கல்லூரி, விடுதி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

MK STALIN
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான  திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், அரசு மக்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.149 கோடி மதிப்பில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

மேலும், ரூ.32 கோடி மதிப்பில் விடுதிகள், சமூதாயக் கூட்டங்களை திறந்து வைத்ததுடன், ரூ.138 கோடி மதிப்பில் புதிய கல்லூரி, விடுதி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

நிலமற்றோருக்கு விவசாய நிலம் வாங்க தாட்கோ  மூலம் ரூ.10 கோடி மானியத்துடன் கடன் உதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தூய்மை பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் இருளர் பழங்குடியினருக்கு 943 புதிய வீடுகள் வழங்கப்பட்டது.

பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் 77 பயனாணிகளுக்கு ரூ.62கோடி மதிப்பிலானன உதவிகள் மற்றும் பணி நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கியுள்ளார்.