வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 28 செப்டம்பர் 2023 (08:38 IST)

போட்டிக்கு நடுவே டான்ஸ் ஆடி ஆடியன்ஸை கலகலப்பாக்கிய கோலி!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அதிரடியாக ஆடி 352 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய இந்திய 66 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஏற்கனவே தொடரை இந்திய அணி வென்றுவிட்ட நிலையில் இந்த தோல்வி ஆஸி அணிக்கு வெறும் ஆறுதல் வெற்றியாக மட்டுமே அமைந்தது.

இந்த போட்டியின் போது சக வீரர்கள் மற்றும் ரசிகர்களை சிரித்து மகிழும் விதமாக விராட் கோலி செய்த செயல் ஒன்று வைரல் ஆகிவருகிறது. முதல் இன்னிங்ஸின் பிரேக்கின் போது, கோலி, ஸ்மித் மற்றும் லபுஷான் அருகே சென்று திடீரென்று நடனமாடி ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார். இது மைதானத்தில் இருந்த ரசிகர்களை வாய்விட்டு சிரிக்கவைத்தது.

இது சம்மந்தமான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது