ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 27 செப்டம்பர் 2023 (18:45 IST)

''Love you too''- சூப்பர் ஸ்டார், அட்லீக்கு வாழ்த்து கூறிய விஜய்...

Vijay SRK
விஜய், ஜவான் பட பிளாக்பஸ்டருக்கு ஷாருகான், அட்லீ உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள் கூறியுள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில், அட்லீ இயக்கத்தில்,சமீபத்தில் வெளியான படம் ஜவான். இப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சமீபத்தில் தன் சமூகவலைதள பக்கத்தில்  விஜய்யின் அடுத்த படத்திற்கு காத்திருப்பதாகவும், 'ஐ லவ் விஜய் சார்' என்று பதிவிட்டிருந்தார்.

இந்த டுவீட்டிற்கு இன்று ரீ டுவிட் பதிவிட்டுள்ள விஜய், ஜவான் பட பிளாக்பஸ்டருக்கு ஷாருகான்,அட்லீ உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள் கூறி, ஷாருக்கானுக்கு பதிலுக்கு ஐ லவ் யூ டூ என்று பதிவிட்டுள்ளார்.