திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 27 செப்டம்பர் 2023 (21:01 IST)

அதிவேக அரைசதம் அடித்து நேபாள வீரர் சாதனை

Kushal Purdel
சீனாவின் ஹாங்சுவில் 19 வது ஆசிய விளையாட்டு தொடர் நடந்து வருகிறது,. இதில், இன்று நேபாளம்- மங்கோலியா அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது.

இதில், மங்கோலியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இதில், குசால் மல்லா 34 பந்தில் சதம் அடித்தர். இது டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதமாகும்.

முதல் 6 பந்துகளில் சிக்சர் அடித்த அவர், அடுத்து 7 வது பந்தில் 2 ரன்னும், 8 பவது பந்திலும் 9 வது பந்திலும் சிக்சர் அடித்தார்.

உலகில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார்.

நேபாள அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது.  இது டி 20 தொடரில் அதிக ரன்கள் ஆகும். இதற்கு முன் ஆப்கான் அணி 278 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாகும். இன்றைய போட்டியில் மங்கோலியா அணி 41 ரன்களுக்கு சுருண்டது என்பது குறிப்பிடத்தக்கது.