1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Kohli bow down before Dinesh karthik

தினேஷ் கார்த்திக்கின் வெறித்தன இன்னிங்ஸ்… விராட் கோலி தலைகுணிந்து மரியாதை!

தினேஷ் கார்த்திக்
RCB அணி நேற்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது.

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஆர் சி பி மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 192 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக டூபிளஸ்சிஸ் 73 ரன்கள் எடுத்த நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 192 ரன்கள் எடுத்துள்ளது. அதன் பின்னர் ஆடிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்தை அணியை சுருட்டி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

RCB இன்னிங்ஸில் கடைசி கட்டத்தில் வாண வேடிக்கைக் காட்டி ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தார் தினேஷ் கார்த்திக். 8 பந்துகளில் 30 ரன்களை சேர்த்த அவர் 1 பவுண்டரியும் 3 சிக்ஸர்களும் விளாசினார். இந்நிலையில் இன்னிங்ஸ் முடிந்து அவர் பெவிலியனுக்கு திரும்பிய போது விராட் கோலி அவரை கௌரவிக்கும் விதமாக அவர் முன் தலைகுணிந்து மரியாதை செலுத்தினார். இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
அடுத்த கட்டுரையில்
”எனக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை”…Comeback பற்றி கிறிஸ் கெய்ல் நம்பிக்கை!