திங்கள், 20 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

சிஎஸ்கே அணிக்கு பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு உண்டா?

chennai kings
சென்னை அணி நேற்று அபாரமாக வெற்றி பெற்றதை அடுத்து பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு உண்டா என்ற தகவல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது
 
 நேற்றைய போட்டியில் சென்னை அணி டெல்லி அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வென்று முதல் முறையாக கடைசி இரண்டு இடத்திலிருந்து முன்னேறி 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது
 
நேற்று படுதோல்வி அடைந்ததால் டெல்லி அணி புள்ளி பட்டியலில் வீழ்ச்சியடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னை அணிக்கு இன்னும் மூன்று போட்டிகள் உள்ள நிலையில் மூன்று போட்டிகளிலும் இதே ரீதியில் அதிகபட்ச ரன் ரேட்டில் வெற்றி பெற்றால் சென்னை அணிக்கு பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு உள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் அடுத்து வரும் போட்டிகளில் தோல்வி அடைய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது