செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 6 மே 2022 (12:11 IST)

’பீஸ்ட்’ விஜய்யுடன் தோனியை ஒப்பிட்ட தினேஷ் கார்த்திக்!

dinesh dhoni
தோனி நடந்து வந்தால் ’பீஸ்ட்’ படத்தில் விஜய் நடந்து வந்தது மாதிரி இருக்கும் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்
 
ஐபிஎல் தொடரை பொறுத்தவரை சிறந்த ஃபினிஷர்கள் என்றால் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரை தான் ரசிகர்கள் கூறி வருகின்றனர்
 
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசையுடன் காத்திருக்கும் தினேஷ் கார்த்திக், ‘தல தோனிக்கு களத்தில் வரவேற்பு பயங்கரமாக இருக்கும் என்றும் அவர் நடந்து வந்தால் அரங்கமே அதிரும் என்றும் ’பீஸ்ட்’ படம் விஜய் மாதிரி அவரது எண்ட்ரி இருக்கும் என்றும் கூறியுள்ளார் 
 
மேலும் சென்னை அணிக்கு ரசிகர்கள் பட்டாளமே உண்டு என்றும் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும் பெங்களூர் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.